இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை செருப்பால் அடித்துக்கொண்டேன்.. பிரபல நடிகையின் உருக்கம்!
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியான படம் தான் ரோஜா. இப்படம் செம்ம ஹிட் அடித்திருந்தது. இன்று வரை இத்திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு திரைப்படமாக உள்ளது.
இந்த படத்தில் ஆரம்பத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா தானாம். மணிரத்னம் அப்போது சந்தித்து கதை சொல்ல முயற்சித்தபோது ஐஸ்வர்யாவின் பாட்டி தெலுங்கு படம் ஒன்றிற்காக முன்பணம் வாங்கி விட்டதாக திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த தெலுங்கு படம் ட்ராப் ஆகி ஒரு மாதமாக ஐஸ்வர்யா வீட்டிலேயே சும்ம இருந்துள்ளார். மதுபாலா அந்த படத்தில் கமிட் ஆகி படம் வெளியாகி செம்ம ஹிட் அடித்துள்ளது.
பின்னர், தன்னுடைய பாட்டியுடன் சேர்ந்து கோயம்பத்தூரில் படத்தை பார்த்துள்ளார். அப்போது இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் என்னுடைய பாட்டி மட்டும் இருந்திருந்தால் நானே கழுத்தை நெரித்து கொன்றிருப்பேன் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.