பாம்பின் குணம் அப்படித்தான் இருக்கும்! வடிவேலுவை தாக்கிய பிரபல நடிகை
நடிகர் வடிவேலு பாம்பை போன்றவர், அவருக்கு பிடித்தவருக்கு மட்டும் தான் நடிக்க வாய்ப்பு வழங்குவார் என பிரபல நகைச்சுவை நடிகையான ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. இவர் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பெயரையும் பெற்றார்.
நீண்ட ஒரு இடைவேளைக்கு பிறகு இவர் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் மீண்டும் வந்தார். அந்த படமானது நினைத்தளவிற்கு வெற்றியை வழங்கவில்லை.
இந்நிலையில் வடிவேலு பற்றி படப்படிப்பின் போது நடந்துக்கொள்ளும் விதம் பற்றி நேர்காணலின் மூலம் நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
வடிவேலு பற்றி என்ன கூறினார்
“ஒருவரது சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் எப்படி இளையராஜா தேவைப்படுகிறாரோ அதுப்போலவே வடிவேலுடைய நகைச்சுவையும் கட்டாயம் தேவை.
அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும். நன்றாக நடித்தால் நம்மிடம்…அங்கே சூப்பர் செல்லம் நன்றாக நடித்து விட்டாய் என்று சொல்வார். ஆனால் படத்தில் அந்த காட்சி இருக்காது.
அது குறித்து ஏன் என்று கேட்டால், அது நல்லா இல்ல செல்லம்... அடுத்த படத்தில் செய்து விடுவோம்… அவ்வளவு தானே என்று சொல்வார்.
என்னுடைய கணவர் மேக்கப் எல்லாம் போட்டு தயாராகி வந்த பிறகு தான், வீட்டுக்கு செல்லுங்கள்..இந்த சீன் நல்லா இல்லை என்றெல்லாம் சொல்லி அனுப்பி இருக்கிறார்” என நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
மேலும் அது குறித்து அவருடைய கணவர் கூறியதானது, “இயக்குநர் திடீரென்று என்னிடம் வருவார். இந்த கேரக்டர் வேறு ஒருவருக்கு செல்கிறது. அதனால் நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என சம்பளத்தை தருவார்.
நடிக்காத படத்திற்கு ஏன் சம்பளம் என்று நான் வாங்காமல் செல்வேன். அது குறித்து வடிவேலுவிடம் கேட்டால் செல்லம் இதைவிட சூப்பரான கேரக்டர் அடுத்த படத்தில் இருக்கிறது என்று சொல்லி அவர் என்னை சமாதானம் செய்து அனுப்புவார்.
அவரை நம்பி இருப்பவர்களுக்கு மட்டுமே இவர் வேலை வழங்குவார். அதுவும் அதில் அவரது மனதிற்கு பிடித்தது போல் யார் வேலை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க சொல்லி அட்வான்ஸ் கொடுத்தார்கள்.
திகதிகளும் அறிவித்திருந்தார்கள். ஆனால் திடீரென்று பட குழுவில் இருந்து போன் செய்து,. அந்த திகதிகள் வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் உங்களுக்கான திகதிகளை சொல்கிறோம் என்று சொன்னார்கள்.
ஆனால் அன்றைய நாளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. என்ன விடயம் என்று கேட்ட பொழுது, வடிவேலு என்னையும் அந்த படத்தில் கமிட்டான கோவை சரளாவையும் மக்கள் அடிக்கடி பார்த்து விட்டார்கள். அதனால் அவர்களுக்கு பதிலாக, புதியதாக யாரையாவது போடலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இறுதியில் அந்த படமே நின்று விட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களில் ஒரு முகத்தை யாருமே பார்க்கவில்லை. பாம்பின் குணம் கொத்துவதுதானே” என கூறியுள்ளார்.