18 வயதில் முதல் காதல்... ஓபன்னாக பேசிய நடிகை சமந்தா! டாட்டூ போட்டாரா?
நடிகை சமந்தா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள போட்டியில், தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரையுலகில் ஃபேமஸானவர் சமந்தா. தமிழில் அவர் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.
பிறகு தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு மொழிகளிலுமே அவர் தனது திறமையை நிரூபித்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.
பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த வருட இறுதியில் திருமணம் நடிந்து முடிந்தது. கடினமான சூழ்நிலைகளையும் அமைதியாக சிரிப்புடன் கடந்து செல்லும் இவரின் பக்குவத்தை பார்த்து இவரின் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே போகின்றது.
இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சிட்டாடல்: ஹனி பனி என்கிற தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படி தனக்கென தனி இடத்தை பிடித்து வெற்றியின் உச்சத்தில் பிரபல நடிக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.
18 வயதில் முதல் காதல்
இந்நிலையில் தற்போது சமீபத்தில் நடிகை சமந்தா ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்த இவர், டாட்டூ குத்திக்கொள்வது என்பது என் வழக்கமாக இருந்தது. ஒரு காலத்தில் டாட்டூ போட்டு வந்தேன்.
எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருவரை காதலித்தேன், அவர் தான் என்னுடைய முதல் காதலாகும். அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என நம்பி அவருக்காக டாட்டூ போட்டுக்கொண்டேன்.
எனினும் இப்போது நாம் அந்த காதல் என்னவானது, அந்த டாட்டூ என்னவானது என்பது குறித்தெல்லாம் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தனது முதல் காதலன் குறித்தும், அவருக்காக சமந்தா போட்டுக்கொண்ட டாட்டூ குறித்து அவர் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |