நடிகர் விவேக் மரணம்... ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல்! வைரலாகும் புகைப்படம்
மாரடைப்பினால் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் இன்று காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகர் விவேக் நெஞ்சு வலி காரணமாக நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்டியாக் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனை செய்து வந்ததோடு, தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு, அது கைகொடுக்காத நிலையில் எக்மோ சிகிச்சையை மருத்துவர்கள் தொடர்ந்தனர்.
ஆனால் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது என்றும் 48 மணிநேரம் கழிக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கண்ணீருடன் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்கள் சிலர் நெகிழச்சியான செயலை செய்துள்ளனர்.
விவேக் சார் அவர்களின் நினைவாக இன்று எனது கிராமத்தில் எனது நண்பர்களுடன் பல மரக்கன்றுகளை நட்டு உள்ளோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம். அவர் வளர்த்துள்ள கோடிக்கணக்கான மரங்களும் அவரின் நினைவாக நாங்கள் நட்டுள்ள பல மரக்கன்றுகளும் என்றும் அவர் அவர் புகழ் பாடும்.... pic.twitter.com/FFITaTfvKn
— Karthik (@Karthik_Jayam_b) April 17, 2021
ஆம் இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்ட விவேக் தனக்கு கிடைத்த நேரங்களில் எல்லாம் மரங்களை நட்டு சாதனைப் படைத்தார். அதுமட்டுமின்றி தனது ரசிகர்களுக்கு அவர் அதனை செய்யுமாறு பலமுறை கூறியதோடு, மரம் நடுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்.
தற்போது மக்களின் கலைஞர் கலைவாணர் மறைந்த நிலையில், அவர் கூறிய வாக்கினை, இன்று அவரின் நினைவாக தனது கிராமத்தில் ரசிகர்கள் சிலர் பல மரக்கன்றுகளை நட்டு உள்ளதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும் மேற்கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி அவர் வளர்த்துள்ள கோடிக்கணக்கான மரங்களும் அவரின் நினைவாக நாங்கள் நட்டுள்ள பல மரக்கன்றுகளும் என்றும் அவர் அவர் புகழ் பாடும்.... என்று புகைப்படங்களை வெளியிட்டு டுவிட் செய்துள்ளது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.