தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு?
நடிகர் விஷ்னு ஒரு பேட்டியில் சுமார் 4 ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு
தமிழ் சினிமாவில் பல உணர்பூர்வமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் தான் விஷ்ணு.
இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் பல வித்தியாசமான திரைக்கதைகளில் கதாநாயகனாக நடித்து வரவேற்பு பெற்ற நடிகராக தற்போது உருவெடுத்துள்ளர்.
இப்படி இருக்க கடந்த 3 - 4 ஆண்டுகளாக அவர் ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune Disease) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.
கட்டா குஸ்தி பாகம் 2 இன் புரமோஷன் போது பேசிய அவர் சமீபத்தில் அவர் நோர்வாக இருந்ததற்கு காரணம் இந்த நோய் தான் என்றும் இன்னும் சில விடயங்களை தெளிவாக பதிவிட்டுள்ளார்.

அவரே கூறிய விடயம்
நடிகர் விஷ்ணு பேசும் போது“சமீபத்திய என்னுடைய பதிவுகள் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது.
அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள்.
அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன்.

அந்த மருந்துகளின் பக்கவிளைவுதான் அந்த சோர்வு. ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.
அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் "கட்டா குஸ்தி 2" படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன.
அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும்.

நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது.ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன்.
வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்” என்று பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |