90ஸ்களில் நாயகன் நடிகர் வினீத்தை நினைவிருக்கா? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்
நடிகரும் பரத நாட்டிய கலைஞருமான வினீத்தின் தற்போதைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றர்.
வைரலட புகைப்படம்
90ஸ்களின் கதாநாயனான நடிகர் வினீத் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.'முதன் முதலாக ஆவாரம் பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானார்.
இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததால் தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல படங்களில் நாயகனாகவும், கதையின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவரத வாழ்க்கையில் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு பரதநாட்டிய கலைஞருமாவார்.
இவர் பல பரதநாட்டிய கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வந்ததால் பல பட வாய்ப்புகளை தவறவிட்டார்.
இவர் நடிகர், பரதநாட்டிய கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இதனால் இன்னமும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சந்ரமுகி படத்திற்கு பின்னர் சினிமாத்துறையில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இவர் 2004ஆம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வினீத்துக்கு ஒரு மகளும் உள்ளார்.
மனைவி மகளுடன் இருக்கும் நடிகர் வினீத்தின் குடும்ப புகைப்படம் தற்போத இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வினீத்தின் மனைவி இவரா என்றும் இவ்வளவு பெரிய மகளா என்றும் இணையவாசிகள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |