கைக்குழந்தையாக வந்த மகள்.. கண்டதும் கண்ணீர் விட்ட ஷோபா- நெகிழ வைத்த வார்த்தை
சமீபத்தில் விஜயின் அம்மா ஒரு குழந்தையை பார்த்து, "என்னுடைய மகள் வித்யா போலவே இருக்கு" என கண்கலங்கிய சம்பவம் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
இளைய தளபதி - விஜய்
பொதுவாக வெளியில் சிரித்தப்படி இருக்கும் பல பிரபலங்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக மோசமான ஒரு பக்கம் இருக்கும்.
ஆனால் சிலர் அதனை வெளியில் கூறுவார்கள். இன்னும் சிலர் மனதிற்குள் வைத்து கொண்டு வேதனைகளை வெளியில் சொல்ல முடியாமல் புலம்புவார்கள்.
அப்படி இருப்பவர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.
விஜய்யின் அமைதிக்கு பின்னால் அவருடைய தங்கையின் மரணம் தான் இருக்கிறது என அவரின் பெற்றோர்கள் பல பேட்டிகளில் கூறி வறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சித்தி கூறிய உருக்கமான செய்தி
இந்த நிலையில், விஜய்யின் அம்மாவின் தங்கை- நடிகை ஷீலா, “சித்தி” சீரியல் நடித்து வந்தார்.
இவர் ஒரு முறை பிரபல ஊடகத்திற்கு பேட்டிகெ் கொடுத்துள்ளார்.
அதில், நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் விஜய் பிறந்தார். எங்களுடன் சேர்ந்து ஷீட்டிங் நடக்கும் இடத்திற்கு வருவார். நாங்கள் யாரும் விஜய் இப்படியொரு நடிகர் ஆவார் என்று நினைக்கவில்லை.
விஜய்க்கு அவருடைய தங்கை வித்யா என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் இறப்பு விஜயை ரொம்ப பாதித்து விட்டது. இப்போதும் விஜய்க்கு அவருடைய தங்கை நினைவுகள் வரும்.” என உருக்கமாக பேசியிருக்கிறார்.
குழந்தைக்கு பெயர் வைத்த ஷோபா
இதனிடையே சமிபத்தில் விஜய் அம்மா - ஷோபா நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது குழந்தையொன்றை தூக்கி ஷோபா அம்மா கையில் கொடுத்து பெயர் வைக்குமாறு கூறியுள்ளனர்.
குழந்தையை பார்த்த ஷோபா, “என்னுடைய மகள் வித்யா போலவே இருக்கிறது. இந்த குட்டி பாப்பாவை போலவே தான் என் மகள் வித்யாவும் இருப்பாள்" என கண்ணீர் விட்டுள்ளார். அந்த குழந்தை வித்யா என்றும் பெயர் வைத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் குறித்தான பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |