பெற்றோருடன் திடீர் சந்திப்பு: வைரலாகும் விஜய்யின் குடும்ப புகைப்படம்
நடிகை விஜய் பெற்றோரை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவரை ரசிகர்கள் இளைய தளபதி என அழைப்பார்கள்.
இவர் நடிப்பில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
இதற்கடுத்தபடியாக தளபதி 69 படத்திலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இப்படியொரு நிலையில், நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
“தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி வேலைகள் படுமும்முரமாக நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து கட்சி சார்பாக அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியலுக்கு வருவதை உறுதிச்செய்துள்ளார்.
பெற்றோருடன் விஜய் சந்திப்பு
இந்நிலையில் தன்னுடைய தாய், தந்தையை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமாவிற்கு விஜயை அறிமுகப்படுத்தி வைத்த தந்தை மீது விஜயிற்கு நீண்ட நாள் மனகசப்பு இருந்தது.
ஆனால் விஜய் வீட்டிற்கு வந்த புகைப்படத்தை அவரே தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த பலர் நீண்ட காலங்களாக அப்பா - மகனுக்கிடையிலான மனக்கசப்பிற்கு தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது என சந்தோசத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
— shoba chandrasekhar (@ShobaSAc) May 27, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |