ஊருக்கே அள்ளிக்கொடுத்த விஜயகாந்தின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு தானா?
சினிமா, அரசியல் என கொடிக்கட்டிப் பறந்த கெப்டன் விஜயகாந்த் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு விபரம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 80,90 களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் நின்றவர் விஜயகாந்த். இவரின் கிராமத்து பாணியில் நடிக்கும் நடிப்பு தான் பட்டித்தொட்டியெல்லாம் இவரை பிரபலமடைய வைத்தது.
விஜயகாந்தின் நடிப்பில் கேப்டன் பிரபாகரன், கஜா, ரமணா போன்றத் திரைப்படங்கள் மக்களை இன்னும் ஈர்த்திருந்தது. சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இவர்.
100ஆவது படம் தான் கேப்டன் பிரபாகரன் இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப்போக மக்களை இவரை கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநராகவும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். மேலும், நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். பின்னர் அரசியலுக்கு சென்று மக்களின் ஆதரவால் 2முறை எம்எல்ஏ வாக இருந்திருக்கிறார்.
சொத்து மதிப்பு
இவரின் உடல் நலம் பாதித்து தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் சினிமா அரசியல் என மொத்தமாக சேர்த்து வைத்த சொத்து மதிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்த் அரசியலில் இருக்கும் போது பலருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் விஜயகாந்தின் மொத்த சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி வரை தான் இருக்கிறது என சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |