நடிகர் விஜய்சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை விஜய்சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் சிறந்த கலைஞராக வலம் வரும் இவர் மிகவும் எளிமையாகவே காணப்படுகின்றார்.
படத்தில் எப்படிபட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை உள் வாங்கிக் கொண்டு தரமாக நடித்து கொடுப்பார். அவர் படத்தில் எண்ட்ரி கொடுத்தாலே அதற்கு தனி சிறப்பும் காணப்படும்.
எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.
சம்பளம் எவ்வளவு?
ஷாருக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழ் படங்களில் நடிப்பதற்கு சுமார் 8 முதல் 10 கோடி சம்பளமாக வாங்குகின்றார்.
ஆனால் ஜவான் ஹிந்தி படம் என்பதால் 21 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறாராம். மேலும் வெளியே செல்லும் போது எந்தவொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிம்பிளாக செல்லும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 110 கோடி என்று கூறப்படுகின்றது.
மேலும் சென்னையில் பல வீடுகளும் உள்ள நிலையில், சில வருடத்திற்கு முன்பு சென்னை சேத்துப்பட்டில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.