நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம் இதோ
நடிகர் விஜய் தனது திருமணத்தின் போது மாமனார் மாமியார் உடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ள நிலையில், இப்படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் முன்னிலையில் விஜய் - சங்கீதாவின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |