மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிய விஜய்! வைரல் புகைப்படம் இதோ
நடிகர் விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ரசிகர்களை சந்தித்து வரும் விஜய்
விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் நிலையில், விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்றம் அலுவலகத்தில் சந்தித்த நிலையில், பின்பு நாமக்களல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்தார்.
இரண்டாவதாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கள் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துடன், மதிய உணவாக மட்டன் பிரியாணியும் வழங்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற உடையில் டிப்டாப்பாக வந்த விஜய்யினை பார்த்த ரசிகர்கள் ஆராவாரம் செய்ததோடு, மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரும் விஜய்யை தேடி வந்துள்ளார்.
பின்பு மாற்றுத்திறனாளி ரசிகரை நடிகர் விஜய் தனது கைகளினால் தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.