இது தான் சார் அன்பு.... விஜய் நெற்றியில் முத்தமிட்ட தாய் - நெகிழ்ச்சி வீடியோ
மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தபோது, விஜய் நெற்றியில் முத்தமிட்ட மாணவியின் தாயின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நெற்றியில் முத்த மிட்ட தாய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
@VijayFansTrends
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மேடையில் நடிகர் விஜய் பரிசுத்தொகை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மாணவியுடன் வந்த தாய் ஒருவர் விஜய்யின் ஊக்கத்தொகைப் பெற்ற பிறகு, விஜய்யைப் பார்த்து தம்பி இங்க வா... என்று கூப்பிட்டார் அவர் கூப்பிட்டதும் நடிகர் விஜய் அருகில் வந்தவுடன் விஜய்யின் நெற்றியில் முத்தமிட்டார். அப்போது, நடிகர் விஜய் நெகிழ்ச்சியில் உறைந்துபோனார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The love he earned over the years 🥺❤️#VijayHonorsStudentspic.twitter.com/CikIoDHWMH
— Vijay Fans Trends (@VijayFansTrends) June 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |