இன்று கோடிகளில் புரளும் நடிகர் விஜய் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?
நடிகர் விஜய் முதன்முதலாக சினிமா துறையில் வாங்கிய சம்பள விபரத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் தனது தந்தை இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார். அவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நடித்த படத்தில் ஒன்று தான் வெற்றி.

இவரது தந்தை இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த், நம்பியார் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு ரூபாய் 500 சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது நடிகர் விஜய் முழுநேர அரசியலில் செயல்பட்டு வரும் நிலையில், இவர் கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இத்துடன் அடுத்து சினிமாவை விட்டு வெளியேறிவதுடன், அரியணை ஏறும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.
இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ரூ.275 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் விஜய்யின் முதல் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நடிகர் விஜய் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |