கட்சியின் பெயரை அதிரடியாக வெளியிட்ட நடிகர் விஜய்... ஆனால் குடும்பத்தில் குழப்பமா?
நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை தற்போது அதிரடியாக வெளியிட்டுள்ளது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம்வருபவர் தான் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமின்றி அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்த இவர் விரைவில் கட்சியில் களமிறங்குவார் என்று எதிர் பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதுடன், இதற்கான அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது 2024ம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவாக இல்லை என்றும், 2026ம் ஆண்டு வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
லியோ பட வெற்றி விழாவிலேயே அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி சூசகமாக தனது பதிலை அளித்தார்.
மேலும் அந்த விழாவில், "புரட்சித் தலைவர் என்றால் ஒருத்தர் தான்... நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான்.. கேப்டன் என்றால் ஒருத்தர் தான்.. உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான்... தல என்றால் ஒருத்தர் தான்..
அதேபோல தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதைச் செய்வார்கள். அரசருக்குக் கீழ் இருப்பவர். எனக்கு மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதைச் செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதைச் செய்து விட்டுப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவதாகவும் வெளியிட்டுள்ளார்.
தற்போது விஜய் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே விஜய் அரசியலில் இறங்குவதால் தான் குடும்பத்தில் சர்ச்சை என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். இதன் பின்பு அவரது குடும்பத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |