50 வயதில் நடிகர் விஜய் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? முழு விபரம் இதோ
நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் தந்தை சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார்.
நடிக்கும் ஆர்வத்தால் கல்லூரி படிப்பையும் பாதியிலேயே கைவிட்ட இவர், முதல் படத்தில் சற்று விமர்சனத்திற்கு ஆளான நிலையில், தற்போது தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்றார்.
முதல் பட தோல்விக்கு பின்பு நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க வைத்து தனது மகனை இன்று சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக மாற்றியுள்ளார் அவரது தந்தை சந்திரசேகர்.
1998ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் நிலையான இடத்தினை பிடித்ததுடன், தற்போது வரை செல்லப்பிள்ளையாக வலம்வருகின்றார்.
அதன் பின்பு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி குடும்பத்தினர் சம்மதத்துடன் காதலி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சொத்துக்கள் எவ்வளவு?
திருமணத்திற்கு பின்பு சங்கீதா விஜய்யின் சொந்த காஸ்டியூம் டிசைனராக மாறிவிட்டார். கில்லி படம் விஜய்யின் திரை சரித்திரத்தையே மாற்றியதோடு, அவருக்கு நிரந்தர இடத்தையும் பெற்றுத் தந்தது.
ரஜினிக்கு பின்பு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஹீரோவான விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடித்த பல படங்களில் விஜய் பாடல்கள் பாடியுள்ள நிலையில் இப்படத்திலும் விஜய் பாடல் ஒன்றினை பாடியுள்ளார்.
தற்போது விஜய் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் நிலையில், தற்போது விஜய்யிடம் ரூ. 474 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு விஜய்யை விட கம்மியான சொத்துக்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |