பிரபல சீரியலிலிருந்து திடீரென விலகிய நடிகர்: அவர் கூறிய காரணம் என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலிலிருந்து நடிகர் வெங்கடேஷ் ரங்கநாதன் திடீரென விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல வித்தியாசமான கதைகளைக் கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் அடிமைகளாகி வருகின்றனர்.
அந்த வகையில், பிர டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியலும் ஒன்று. எப்போது நாயகி அவர் அம்மா, செண்பகத்துடன் இணைவார் என, விறுவிறுப்பான கதையம்சத்துடன் இந்த சென்று கொண்டிருந்த சீரியலில், ஒருவழியாக ரோஜா அவரது அம்மாவுடன் சேர்ந்துவிட்டார்.
ஆனால் ரோஜா செண்பகத்தின் மகள் இல்லை... அணு தான் அவர் மகள், என்று நம்பி கொண்டிருப்பவர்கள் எப்போது மாறுவார்கள், அவர்களுக்கு உண்மை எப்போது தெரியவரும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்ஜுனுக்கு தம்பியாக அஸ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வெங்கட் ரங்கநாதன். இவர் மற்றொரு ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரிலும் ஜீவா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது திடீரென, 'ரோஜா ' சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, நேற்றைய தினம் இவருக்கு பதில் மற்றொரு நடிகர் அறிமுகமானார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... 'தன்னுடைய ரசிகர்களுக்கு வணக்கம், இந்த செய்தி வருத்தமானது தான்... நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். இந்த தகவல் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தால் மன்னித்து விடுங்கள், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவாக என்னை தொடர்ந்து பார்க்கலாம்.
மேலும் உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார். திடீர் என இந்த சீரியலில் இருந்து இவர் விலக காரணம், ஒரே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் ரோஜா ஆகிய சீரியல்களில் நடிக்க நேரம் இல்லாத காரணத்தாலேயே இவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
