சந்தோஷமா பிறந்த நாள் கொண்டாடிய வேலராமமூர்த்தி! இறுதியில் அரங்கேறிய பணமோசடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி தனது பேஸ்புக் தளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் வேலராமமூர்த்தி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இதில் ஆதி குணசேகரான நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இவருக்கு பின்பு இவரது கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகின்றார். பன்முக திறமை கொண்ட இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்த வசனம் என்றால் இளந்தாரி பய என்பது தான்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் நேற்றைய தினத்தில் வேலராமமூர்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருடைய நண்பர்களும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்களும் சேர்ந்து எதிர்நீச்சல் சீரியல் செட்டில் வைத்து கேக் வெட்டி அவருக்கு மாலை போட்டு பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடியுள்ளனர்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற சிறிதுநேரத்தில் வேலராமமூர்த்தி தன்னும் முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் நான் சந்தோஷமாக பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது எனக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.
அதாவது என்னுடைய பெயரில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதன் மூலம் ரசிகர்களிடம் சிலர் பண மோசடி செய்வதாக நான் கேள்விப்பட்டேன். அதனால் யாரும் அதில் சிக்கி விடாதீர்கள் என்று வேலராமமூர்த்தி கூறி இருக்கிறார்.
அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்து விடுவோம். ஆனால் மக்கள் யாரும் அதில் ஏமாந்து விடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |