நடிகர் சூர்யாவின் தங்கை இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா? அவரே வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் சூர்யா கார்த்தியின் சகோதரியான பிருந்தாவும் தற்போது சினிமா துறையில் மும்மரமாக இறங்கி உள்ளார்.
பிருந்தா சிவகுமார் சினிமாவுக்கு புதிதானவர் அல்ல. முன்னதாகவே பிரபல பாடகியாக வலம் வருபவர் தான் இவர்.
இனிமையான குரலால் வசிகரிக்கும் பிருந்தா, ஜாக்பாட், பொன்மகள் வந்தால், ஓ2 என பல படங்களில் பாடியுள்ளார்.
தற்போது இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக களம் இறங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வரும் பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆலியாவிற்கு குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்துள்ளதை மகிழ்ச்சி போங்க தெரிவித்துள்ளார் பிருந்தா.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி பான் இந்தியா படமாக கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரம்மாஸ்திர படத்தில் அமிதாபச்சன், ஷாருக்கான், ரன்வி கபூர், அலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல சர்ச்சைகளில் சிக்கிய பிரம்மாஸ்திரார் தற்பொழுது திரையரங்குகளில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.