ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சூரி... - மாஸ் அப்டேட்... - குஷியில் ரசிகர்கள்...!
மீண்டும் ஹீரோவாக நகைச்சுவை நடிகர் சூரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் மதுரையில் ஓட்டல் தொழிலையும் சூரி நடத்தி வருகிறார்.
மீண்டும் ஹீரோவானார் சூரி
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சர்வதேச விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ படத்தை இயக்கி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி, நடிகை அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.
தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் செய்தியைப் பார்த்த ரசிகர்கள் சூரிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.