கார் விபத்தில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்... நடந்தது என்ன?
நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது சற்று பதற்றத்தினை ஏற்படுத்தி்யுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படமான பராசக்தி படத்தின் ப்ரொடெக்ஷன் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், இவரது கார் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் விபத்தில் பழுதடைந்த கார் டிரைவர் சிவகார்த்திகேயன் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |