வெறும் 11 ஆண்டுகளில் இத்தனை கோடியா? வெளியானது சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமா துறையில் அருர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
சிவகார்த்திகேயன்
பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான 'சூப்பர் சிங்கர்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள்
இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.
சொத்து மதிப்பு
அந்த வகையில் தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதுப்படங்களுக்கு அதிகபட்சமாக நடிகர் சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னையில் சொந்த வீடு உள்ள நிலையில், சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் பிரம்மாண்ட புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையும் நடத்தியிருந்தமை அனைவரும் அறிந்ததே.
சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிகிய காலத்தில் இவரின் பிரம்மாண்ட வளர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |