மனைவியோடு ஒப்பிடும் போது நா பட்டது எல்லாம் வலியே இல்ல.. எமோஷனலாக பேசிய SK
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி பட்ட கஷ்டங்கள் பற்றி மிகவும் கவலையாக பேசியிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, ஸ்டாண்ட்-அப் காமெடியனாக வெற்றி பெற்று பிரபல தொலைக்காட்சி வாயிலாக சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது கோலிவுட் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் வெகு சீக்கிரமே கதையின் நாயகனாக மாறினார்.
இதற்கிடையே தற்போது 39 வயது நிரம்பிய சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரோடு திருமணமானது. இவர்களுக்க ஆராதனா, குகன் மற்றும் பவன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வெற்றியின் ரகசியம் மனைவி தான்..
இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், “ எனக்கு இப்பொழுதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் இருக்கின்றன. அப்போது சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எந்த சந்தர்ப்பம் வந்தாலும் எனக்கு என்னுடைய மனைவி பக்க பலமாய் இருக்கிறார்.
உனக்கு பிடித்ததை நீ செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என அடிக்கடி எனக்கு ஊக்கம் கொடுப்பார். எனக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் சிசேரியன் முறையில் பிறந்தவர்கள் தான்.
இருப்பினும் அந்த வலியை தாங்கிக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, என்னையும் கவனித்து வருகிறார். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய மனைவி தான் காரணம். ரகசியம் என்றும் சொல்லலாம்...” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |