என்னது சிம்புவிற்கு 40 வயதா? 20 வயதாக உடம்பை குறைத்து வெளியிட்ட வைரல் புகைப்படம்
நடிகர் சிம்பு மளமளவென உடல் எடையை குறைத்து, 20 வயது இளைஞர் போன்று தோற்றமளிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு அவ்வப்போது உடல் எடையை தாறுமாறாக குறைக்கக்கூடியவர். ஆனால் இவ்வாறு உடல் எடையைக் குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல.
ஆனால் நடிகர் சிம்பு 108 கிலோ உடல் எடையினை 40 கிலோவாக அசால்ட்டடாக குறைத்துள்ளார். அதாவது நடிகர் சிம்பு தனது 30 வயதிலிருந்தே எடையைக் குறைப்பதை செய்துள்ளார்.
சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில், செம்ம ஸ்டைலாக வந்துள்ளார் சிம்பு.
மிகவும் எதிர்பாக்க கூடிய படமாக உள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
இதில் 20 வயது இளம் காளையாக, சிம்பு செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.