எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை செய்த சிலம்பரசன்! இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்
நடிகர் சிம்பு இது வரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்த்தியுள்ளார்.
இதனை சிம்புவின் ரசிகர்கள் வேற லெவெலுக்கு ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். நடிகர் சிம்புவுக்கு நடிப்புக்கு அவரின் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சிம்புவின் கைவசம் தற்போது, 'வெந்து தணிந்தது காடு ' , 'பத்து தல' ஆகிய படங்கள் உள்ளன.

இதுஒரு புறம் இருக்க, தற்போது சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள சாதனையை தான் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து 315 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், ஒரு வருடத்திற்குள் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இவ்வளவு குறுகிய நாட்களுக்குள் எந்த நடிகருக்கும் இவ்வளவு ஃபாலோயர்ஸ் பின்தொடர்ந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய நாட்களில் சிம்பு செய்த சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.