மீண்டும் எலும்பும் தோலுமாக மாறிய சிம்பு.. சுகம் விசாரிக்க ஆரம்பித்த ரசிகர்கள்
மீண்டும் எலும்பும் தோலுமாக மாறிய சிம்புவின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிம்பு.
இவர், பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி ராஜேந்தரின் அன்பு மகனாவார். தன்னுடைய தந்தை போல் பன்முக திறமைக் கொண்டவராக திகழும் சிம்புவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.
தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து, தன்னுடைய 48-ஆவதை படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிம்புவுக்கு இரட்டை வேடம் எனவும் சொல்லப்படுகின்றது.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் 41 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தன்னுடைய 19 வயதில் சினிமாவுக்கு நுழைந்த சிம்பு பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் குறைந்து காலப்போக்கில் சினிமா பக்கமே காணாமல் போய்விட்டார்.
உடல் எடை குறைத்த சிம்பு
இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்திற்காக மீண்டும் சிம்பு, உடல் எடையை குறைத்து சிலிம்மாக மாறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தனது கதாபாத்திரத்துக்காக சுமாராக 10 கிலோ வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே வெளியே எங்கும் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த பலரும், “இவருக்கு என்னாச்சு..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
