பாக்கிலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யார் தெரியுமா?
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பிரபல நடிகர் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் கல்வியிலும் தன்னால் ஈடு கொடுத்து வெற்றி பெற முடியும் என கெத்து காட்டி வருகிறார்.
சீரியலில் பிரபல நடிகர்
பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கதையம்சம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அரைத்த மாவையே அரைப்பது போல தொடர்ந்துக் குறைந்து வருகின்றது.
இந்நிலையில், சீரியலை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்த சீரியலுக்கு பிரபல இளம் நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் பிரபல நடிகரான சித்தார்த் தான் பாக்கியாவிற்கு ஆதரவாக நடிக்க இருக்கிறார். இவர்கள் இணைந்து நடித்த காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் ஒளிபரப்பாகவுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |