காதலில் தோல்வி அடைந்த நபருக்கு.. ஷாருக்கான் கொடுத்த அதிர்ச்சி பதில்! என்ன?
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைத்துறையில் 29 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், டுவிட்டர் வழியே ஷாருக் கானிடம் கேளுங்கள் என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
அதில், ரசிகர்கள் பலர், அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுக்கு தனக்கே உரிய வகையிலான நகைச்சுவை உணர்வுடனும், புத்திசாலித்தனத்துடனும் அவர் பதில் அளித்து வந்தார்.
இதையடுத்து, ரசிகர் ஒருவர், காதலில் தோல்வி அடைந்த நபர் அதில் இருந்து மீண்டு வெளிவருவது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகர் ஷாருக் கான், அதில் இருந்து நீங்கள் ஒருபோதும் வெளிவர முடியாது... அதனை நினைவாக வைத்திருங்கள். அந்த சோகத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள்.
மேலும், அது உங்களை வலிமை உடையவராக ஆக்கும் என தெரிவித்து உள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், குறைவாக வேலை செய்து, என்னுடைய குடும்பத்தினருடன் அதிகம் செலவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.