மறைந்த நடிகர் சேதுராமன் மனைவியின் கலங்க வைக்கும் பதிவு- என்ன சொல்லியிருக்கிறார்?
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா தனது இன்ஸ்டாகிராமில் ஏழாவது திருமண நாள் குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சேதுராமன்
2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர்.
சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.
வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்தார்.
2016-ம் ஆண்டு தான் இவருக்கும் உமையாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
திடீர் மரணம்
இளம் வயதில் மருத்துவம் படித்த ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் இறந்த சமயத்தில் அவருடைய மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதனையடுத்து சேதுராமனின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி உமாக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இவர் தனது இரண்டு குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருவதாக பலமுறை தெரிவித்துள்ளார்.
பதிவு
இந்தநிலையில் தற்போது அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது
ஏழு வருடங்கள் முன்பான இந்த நாளை பார்க்கிறேன். என்னை சுற்றி எவ்வளவோ மாறினாலும் இந்த நாளை நினைக்கும் போதெல்லாம் நமது காதல் உணர்வு அப்படியே இருக்கிறது.
இந்த நாளை நாம் கொண்டாடியதே இல்லை, அவ்வாறு கொண்டாடுவதில் உங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு வருடமும் எனது உணர்வை வெளிப்படுத்தி வருகிறேன், அந்த நினைவுகளை நான் நேசிப்பேன், இனிவரும் ஆண்டுகளிலும் அதை தொடர்ந்து செய்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.