இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் நடிகர் சேஷுவின் உருக்கமான பேட்டி
நடிகர் சேஷு தான் லொள்ளு சபாவில் நடித்ததிற்காக அந்த சேனலில் அவர் நடிப்பிற்கேற்ற எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என தனது கடைசி பேட்டி ஒன்றில் கவலையுடன் கூறிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மிகவும் கண்கலங்கி நடிகர் சேஷூ சினி உலகம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் பட்ட புறக்கணிப்புகளை வலியோடு பதிவு செய்திருக்கிறார்.
அவர் பேசும் போது 'நான் நிறைய சேனலில் பணிபுரிந்துள்ளேன். அதிலும் லொள்ளு சபா மிகவும் பிரபலமானது. நாங்கள் லொள்ளு சபாவிற்கு ஒரு முறைதான் பேமண்ட் வாங்கி இருக்கிறோம்.
அந்தச் சேனலில் இருந்து, லொள்ளு சபாவில் நடித்தவர்களுக்காக ஒரு சின்ன அங்கீகாரம் மற்றும் விருதுகள்கூட கிடைத்தது இல்லை. செத்துச் சுண்ணாம்பு ஆகி விடிய விடிய நடித்திருக்கிறோம்.
எங்கள் டைரக்டர் மற்றும் டைரக்டரின் டிஸ்கசன் குழு தான் லொள்ளுசபா வெற்றிக்குக் காரணம். எனக்கு வாய்ப்பளித்த மாறனை நான் மறக்க மாட்டேன்'. என மிகவும் கவலையுடன் கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |