4 வருடமாக கோமாவில் சத்தியராஜ் மனைவி! தந்தையை பற்றி மகள் பகிர்ந்த உருக்கமான பதிவு
சத்தியராஜின் மனைவி தொடர்ந்து நான்கு வருடங்களாக கோமாவில் இருக்கிறார் என அவரது மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தியராஜ்
கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகனாக மாறி நடித்து வருகிறார்.
இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்தவர் போக போக கதை தேர்வை மாற்றிக் கொண்டு, ஹீரோ இமேஜை கழற்றி வைத்துவிட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நடிப்பு திறமையை காட்டி வந்தார்.
இந்த நிலையில் இவருடைய மகன் சிபிராஜ் தன்னுடைய நடிப்பை சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார். மகள் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவரின் பெயர் திவ்யா. இவர் சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறியிருப்பது, தனது தாயார் மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார்.
இவருக்கு பிஜி குழாய் மூலமாக தான் உணவு எல்லாம் கொடுக்கப்படுகின்றது என கூறியிருக்கிறார். தனது தந்தை 4 ஆண்டுகளாக சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என திவ்யா சத்யராஜ் மிக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |