ஜமீன் பரம்பரை... 500 கோடி சொத்து: இன்றோ பரிதாப நிலையில்- யார் அந்த நடிகர்?
குணச்சித்திர வேடங்களில் நடித்த ஜமீன் பரம்பரையை சேர்ந்த நடிகர் இன்று சினிமாவால் தன் சொத்துக்களை இழந்துள்ளார்.
நடிகர் சத்யன்
விஜயின் நண்பன் படத்தில் "சைலன்சர்" என்ற கேரக்டரில் எளிமையான தோற்றத்துடன் நம்மை அசத்தியவர் காமெடி நடிகர் சத்யன். "ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா" எனும் வசனம் மூலம் அனைவரின் மனதில் இடம்பிடித்தார்.
அவரது முகபாவனைகளும், நேர்த்தியான காமெடியும் ரசிகர்களை கவர்ந்தது. சத்யன் தனது திரை பயணத்தை சிறிய ரோல்களுடன் தொடங்கினார்.
சூர்யா நடித்த காதலே நிம்மதி படத்தில் அவர் நடித்த சிறு வேடம் கவனிக்கத்தக்கது. பின்னர், 2000ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளிவந்த இளையவன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்திலும் முக்கிய கதாநாயகனாக நடித்தார். நடிகர் சத்யன், வெறும் காமெடி நடிகரல்ல.
கோயம்புத்தூர் அருகே உள்ள மாதம்பட்டி என்ற ஊரில் இருந்து வந்த ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை மாதம்பட்டி சிவக்குமார், பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. 5 ஏக்கர் பங்களா, நூற்றுக்கணக்கான ஏக்கர் தோப்புகள் இவர்களுடையது.
சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, சிவக்குமார் சில படங்களை தயாரித்தார். ஆனால், அவை தோல்வியடைந்ததால், சொத்துக்களை விற்க ஆரம்பித்தார். பின்னர், மகன் சத்யனை ஹீரோவாக்கும் ஆசையுடன் 'இளையவன்' படத்தை தயாரித்தார்.
அந்த படம் கூட தோல்வியடைந்ததால், மீதமிருந்த சொத்துகளையும் விற்றனர். இன்று, ஒருகாலத்தில் "குட்டி ராஜா" என அழைக்கப்பட்ட சத்யன், சொந்த ஊருக்கே செல்வதை தவிர்க்கும் நிலைக்கு வந்துள்ளார்.
ஆனால் சினிமாவில் தனது காமெடித் திறமையால் தனி இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |