நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி
நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி ஒன்றின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது நடிகர் சதீஷ் கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் வெளியூருக்கு கிளம்புவதற்காக சூட்கேசை தயார் செய்து கொண்டிருக்கும்போது அந்த சூட்கேசில் அவருடைய குழந்தை உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
மேலும் அந்த குழந்தை ’பெங்களூர் போங்கோ, காஷ்மீர் போங்கோ, மும்பை போங்கோ, எங்கே போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்கோ, அப்பா’ என்று கூறுவது போன்ற கேப்ஷனை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்தது. தற்போது அப்பா மகள் இருவரும் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.