நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார், நடிப்பையும் தாண்டி, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாகவும் வலம் வருகின்றார். இவர் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், இவருக்கு ராகுல் என்ற மகன் இருக்கின்றார்.
முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், இதில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வயிற்றுகோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த சரத்குமாருக்கு உடம்பில் நீர்சத்து குறைந்துள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நடிகை வரலட்சுமி, மற்றும் ராதிகா மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலில், மருத்துவமனை பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.