காமெடி நடிகரிலிருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் - கோடிக்கணக்கில் சேர்த்து வைத்த சொத்து
காமெடி நடிகராக கலக்கி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் மொத்த சொத்துமதிப்பு பற்றிய விபரங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சந்தானம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகளால் அனைவரையும் கவர்ந்து திரைத்துறையில் அறிமுகமானவர் தான் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவையும் வாயடைக்க வைக்கும் கவுண்டர்களும் நடிகர் சிம்புவிற்கு பிடித்துப்போனதால் மன்மதன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் அவரின் நகைச்சுவையும் நடிப்பும் பிடித்துப்போக அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவித்து வந்தது. தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவருக்கு முதன் முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகின்றார்.
சொத்து மதிப்பு
வறுமைக்குடும்பத்தில் பிறந்து திரையில் சாதிக்க வந்த சந்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சந்தானம் தற்போது நடிக்கும் படங்களுக்கு 15 இலிருந்து 20 கோடி வரைக்கும் சம்பளம் பெறுகிறார்.
இவர் சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் தொழில்களிலும் இலாபம் பார்த்து வருகிறார். அத்தோடு 2 சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.
இவையெல்லாம் சேர்த்து இவரின் மொத்த சொத்துமதிப்பானது 100 இலிருந்து 120 கோடிக்கு வரை சேர்த்து வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |