சத்தமே இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்ய பிளான் போட்ட ரியாஸ்கான்- எப்போது, எங்கு தெரியுமா?
நடிகை உமா ரியாஸ்கான் - மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரியாஸ்கான்
தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ரியாஸ்கான்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடிப்பார்.
தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.
எளிமையாக திருமணம்
இந்த நிலையில் நடிகை உமா- ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசனுக்கு விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாரிக்கின் திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தான் சாரிக் நடைபெற இருக்கிறது.
இந்த திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையான முறையில் சொந்தங்களை வைத்து உமா- ரியாஸ்கான் இருவரும் நடத்த இருக்கிறார்கள்.
மாறாக இதுவரையில் ரியாஸ்கான் தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |