Divorce கேட்டும் ராதிகா.. மீண்டெழ முடியாத சோகத்தில் கோபி- குடும்பத்துடன் சேர்வாரா?
குடும்ப பிரச்சினை முற்றிப் போனதால் ராதிகா, கோபியிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பியில் முன்னிலை இருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராதிகா கால் தடுமாறி கீழே விழுந்ததால் அவரின் கர்ப்பம் கலைந்து விட்டது.
மயூரா நீதிமன்றத்திற்கு வந்த சாட்சி கூறியதால் ஒருவழியாக பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்க, கோபத்தில் ஈஸ்வரி, “இனி எனக்கு மகனே இல்லை” என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார்.
விவாகரத்து கேட்கும் ராதிகா
இந்த நிலையில் இனியாவும் நைட் பார்ட்டிக்கு சென்று பிரச்சினையாகிறது.
இந்த பிரச்சினையும் பாக்கியா ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வருகிறார். இவ்வளவு பிரச்சினை நடந்ததால் கோபி குடும்பத்தை பிரிந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்.
திடீர் என கடுப்பான கோபி, “ என்னுடைய குடும்பம் இவ்வளவு தூரம் என்னை வெறுப்பதற்கு நீ தான் காரணம்...” என ராதிகா மீது பலி சுமத்துகிறார். கோபி இப்படி பேசியவுடன் ராதிகா, “ அப்போ ஏன் என்னோடு இருக்கீங்க. விவாகரத்து தாங்க...“ என பேசி விடுகிறார்.
ராதிகா இவ்வளவு கடுமையாக பேசியவுடன் கோபி மேலும் மனமுடைந்து இரவு முழுவதும் தூங்காமல் சோகபாடல் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |