சர்ச்சைகளுக்கு மத்தியில் கெனிஷாவுடன் ஜோடியாக சென்ற ரவி மோகன்! எங்கே தெரியுமா?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக சென்று திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன்.

ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவரின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சையும் ஆரம்பமாகியது.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.
ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து இருவரும் ஜோடியாக கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை உண்மையாக்கியது.

ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இது குறித்து உண்மையாக காரணம் சரியாக தெரியவில்லை. குழந்தைகளுடன் ஆர்த்தி தனியான வாழ்ந்து வரும் நிலையில், ஆர்த்தியை பிரிந்ததில் இருந்தே சர்சையின் முக்கிய புள்ளியான பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றார்.

அதனால் இவர் கெனிஷாவுடன் இணைவதற்காக தான் மனைவி ஆர்த்தியை பிரிந்தாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் கெனிஷாவுடன் ஜோடியாக திருப்பதி சென்றிருப்பது மீண்டும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டதாகவும், ”Happy Election Day" என்றும் தெரிவித்தார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

