பிக்பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்குபவர் இந்த நடிகரா? பயங்கர எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி தமிழைப்போலவே தெலுங்கில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
இதையடுத்து, முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில், முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக 'பாகுபலி' நடிகர் ராணா தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் முன்பு ராணா 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது வரவேற்பை பெற்றதே என கூறி வருகின்றனர்.
