விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்... நடிகர் ராமராஜன் தற்போதைய நிலை என்ன?
ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்த நடிகர் ராமராஜன் தற்போது என்ன செய்கின்றார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் நீங்கா இடம் பிடித்த நடிகர் ராமராஜன் 1980களில் கொடிகட்டி பறந்த நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்த இவர், கடந்த 1987ம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகள் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என்ற இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், பின்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பல ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ராமராஜன், தற்போது மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார். சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
வெளிநாட்டிலும் மிரட்டும் ராமராஜன்
நடிகர் ராமராஜனி்ன் மகன் அருண் வெளிநாட்டில் ஆடிட்டராக இருந்து வரும் நிலையில், அங்கு உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தமிழ் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளது.
அதில் ஹைலைட்டாக நடிகர் ராமராஜனின் கரகாட்டக்காரன் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. இதனை அவதானித்த அவரது மகன் குறித்த ஹொட்டல் உரிமையாளரை பார்த்து பேசிய போது அவரும், ராமராஜனின் ஊராக சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந்த போஸ்டர்களை காணொளியாக எடுத்து அவரது பேரன் ராமராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். மேலும் செண்பகமே செண்பகமே பாடலை பார்த்ததிலிருந்து அவரது பேரன் COW தாத்தா என்று அழைத்து வருகின்றாராம்.
தான் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், வெளிநாடு வரை அப்படம் பரவியுள்ளது மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |