நளினி- ராமராஜன் பிரிய இதுதான் உண்மையான காரணமாம்! சொந்த காசில் சூனியமா?

Fathima
Report this article
நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த ராமராஜன்- நளினி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், இன்று வரை முன்னாள் கணவரை நேசித்து வருவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார் நளினி.
காதல் மலர்ந்தது இப்படித்தான்
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில் தங்களுடைய காதல் கதை குறித்து நளினி பேசுகையில், நான் நடிக்க வந்த போது உதவி இயக்குனராக ராமராஜன் பணியாற்றினார், அவர் ஒருதலையாக என்னை காதலித்து வந்துள்ளார்.
படப்பிடிப்புக்கு இடையில் எனக்கு காதல் கடிதங்கள் கொடுப்பார், ஒருநாள் ஆடை அணிந்து வந்த போது ”இது நன்றாக இருக்கிறது, நாளைக்கும் போட்டுட்டு வாங்க” என்று கூறினார்.
ஏதேச்சையாக நான் அதையே போட்டுக்கொண்டுவர, அவரது காதல் மேலும் அதிகரித்துவிட்டது.
எனக்காக அடி வாங்கினார்
நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக அவர் நடித்த போது, என்னிடம் காதலை சொல்வதற்காக ஒய்எம்சிஏ-விற்கு வருகிறார்.
அப்போது அவர் என்னிடம் பேசுவதை பார்த்துவிட்டு, என்னுடன் வந்தவர் என் வீ்ட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டார்.
உடனடியாக அங்கு வந்த எங்கள் வீட்டார், ராமராஜனை அடித்து துவைத்துவிட்டனர், அப்போது தான் பரிதாபப்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அதன்பின்னர் மலையாள படங்களில் நடிப்பதற்காக சென்றுவிட்டேன், ஒரு வருடம் சென்னைக்கே வரவில்லை.
விருது விழாவில் துளிர்விட்ட காதல்
பாலைவன ரோஜாக்கள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தாய் விருது எனக்கும், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ராமராஜனுக்கும் கொடுத்தார்கள்.
அப்போது தான் மீண்டும் அவரை பார்த்தேன், எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
அப்போது 6-வது குறுக்குத்தெரு என்ற ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பாண்டியன் மதுரை என்பதால் அவரை வைத்து பேசி அப்படியே கல்யாணம் பண்ணதுதான்.
கடந்த 1987-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது.
திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருந்தாலும், நாங்கள் பிரிந்துவிடுவோம் என எங்களுக்கு தெரிந்துவிட்டது, இதனால் சமரசமாக 2000ம் ஆண்டு பிரிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
நளினி- ராமராஜன் பிரிய காரணம்
மேலும், ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம்.
அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது புகழ் போயிடும் என்று அவர் கணித்தார்.
நானோ, ”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார்.
ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம்.
ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார்.
ஜோதிடத்தால் நேர்ந்த வினை
இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர், இருவருமே நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கின்றனர், நளினியும் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் மனைவியை பிரிந்த நேரமோ என்னமோ ராமராஜன் சினிமாவில் ஜொலிக்கவில்லை என பேசப்படுகிறது, கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கொள்கை கொண்ட ராமராஜன் விவாகரத்துக்கு பின்னர் 3 படங்கள் மட்டுமே நடிக்க படம் தோல்வியையே சந்தித்தது.
ஆனாலும் இன்றுவரை தன் கணவரை புகழ்ந்தே பேசிக்கொண்டிருக்கிறார் நளினி, இன்று வரை தன் கணவன் மீதான் காதல் குறையவில்லை என நெகிழ்கிறார்!!!
