மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் திடீர் அனுமதி: மனைவி கூறிய பரபரப்பு காரணம்
நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்(70) இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென அனுமதிக்கப்பட்டதால் சிறுநீரக கோளாறு என்று பல தகவல்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் இன்பார்க்ட் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும். ரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்த குழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்குமாம்.
ஆனால் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி லதா கூறியுள்ளார்.
ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.