பிரபல பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று திடீரென காலாமானார். திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் ராஜேஷ்
தமிழ் சினிமாவில் 70களில் புகழ்பெற்று விளங்கியவர் தான் நடிகர் ராஜேஷ். அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தனிகாட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, சிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன், ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 75 வயதாகும் ராஜேஷ் நடிப்பை விட்டு ஓய்வில் இருந்த அவர் இன்று காலை மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |