இலங்கையில் நடிகர் ரகுமானுக்கு இருந்த தீவிர ரசிகை... டின்னருக்கு சென்ற இடத்தில் நடந்தது என்ன?
நடிகர் ரகுமான் தனது தீவிர ரசிகையின் பெயரையே தனது மகளுக்கு வைத்துள்ள சுவாரசிய சம்பவத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ரகுமான்
தமிழ் சினிமாவில் 1989ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படம் மூலம் அறிமுகமானவர் தான் ரகுமான். 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வரும் இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் கடந்த 1993ம் ஆண்டு மெஹ்ரூனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏ.ஆர்.ரகுமான் மனைவியின் தங்கை ஆவார்.
நிகழ்ச்சி ஒன்றில் மெஹ்ருனிஷாவை பார்த்த போது பிடித்துக்கொண்டதால், அவரையே திருமணமும் செய்துள்ளார்.
மகளுக்கு ரசிகையின் பெயர்
இவர் ஒருமுறை பேட்டி ஒன்றில் பேசுகையில், இலங்கையில் ரகுமானின் தீவிர ரசிகை இருந்ததையும், தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ரகுமானை பார்த்துவிட வேண்டும் என்ற சபதத்துடனும் இருந்துள்ளார்.
இலங்கைக்கு ஒருமுறை படப்பிடிப்பிற்கு சென்ற போது, அந்த பெண்ணின் பெற்றோர் ரகுமானை பார்த்து மகளின் ஆசையைக் குறித்து பேசியுள்ளனர்.
ரசிகையின் ஆசையை நிறைவேற்ற ஒருநாள் இரவு விருந்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் ரகுமான் பயங்கர அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் ரசிகையின் வீட்டில் படுக்கையறை தொடங்கி பாத்ரூம் வரை ரகுமானின் புகைப்படங்கள் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் ரகுமானை நேரில் சந்திக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற முடிவிலும் அப்பெண் இருந்துள்ளாராம்.
அப்பெண்ணை பார்த்த நடிகர் ரகுமான் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு அட்வைஸ் கொடுத்துள்ளார். தனக்கு இப்படியொரு ரசிகையா என்று வியந்து போன ரகுமான், அவருக்கு ஏதாவது செய்ய நினைத்து தனது பெண் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரையே வைத்துள்ளார்.
இதே போல் குறித்த ரசிகையும் தனது மகனுக்கு ரகுராம் என்று பெயர் வைத்துள்ளாராம். இதனை ரகுமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |