மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் 4 பேருக்கு தானம் - மருத்துவர்கள் வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் 46 வயதில் மாரடைப்பு காரணமாக இறந்த விஷயம் இந்திய திரையுலக ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
புனித் ராஜ்குமாரின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பல திரைப்பிரலங்களும் கலந்துகொண்டனர். இதனிடையே, தனது பெற்றோர்களைப் போலவே புனித் ராஜ்குமார் தனது கண்களைத் தானம் செய்திருந்தார்.
இச்சம்பவம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கண்களை தானமாக பெற்ற மருத்துவர்கள் தற்போது நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வழி செய்துள்ளனர்.
அதில், விழிப்படத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியை பிரித்து நவீன தொழில்நுட்பத்துடன் அறுவை சிகிச்சை செய்து நால்வருக்கு பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும், இதனால் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் வயதினர்கள் இதன் மூலம் பயனுடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.