இப்ப தானே திருமணமாச்சி.. அதுகுள்ளவா? மனைவியை கட்டியணைத்தபடி Good News சொன்ன பிரேம்ஜி
திருமணமாகி குறுகிய நாட்களில் பிரேம்ஜி பதிவிட்ட குட் நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரேம்ஜி - இந்து திருமணம்
இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.
பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குட் நியூஸ் சொன்ன பிரேம்ஜி
திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய ஆசை மனைவியுடன் நெருக்கமாக எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், பிரேம்ஜி- இந்து திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அதற்கு மனைவிக்கு வாழத்து கூறி பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ திருமணமாகி ஒரு மாதம் அதற்குள் ஆகிவிட்டது பேபி” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும், காணொளியை பார்த்த இணையவாசிகள், “ அதுக்குள்ளயா?” என அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |