அப்பாவான பிரேம்ஜி- என்ன குழந்தை தெரியுமா?
திருமணமாகி ஒரு வருடம் கடந்த நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் பிரேம்ஜி அமரன்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்களில் ஒருவராக இருப்பவர் தான் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன்.
இவர் தன்னுடைய அப்பாவை போன்று சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், சிறந்த நடிகராகவும் இருக்கிறார்.
பிரேம்ஜி நடிக்கும் படங்களில் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனாலும் அடிக்க ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

“ ப்ளே பாய்” என தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அழைக்கும் அளவுக்கு லீலைகளின் மன்னனாக இருந்தார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய 44 வயதில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடந்தது.
குட் நியூஸ் சொன்ன தம்பதி
இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் மாமியார் வீட்டுடன் இணைந்து தனியாக சில பிஷ்னஸ்களை செய்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, இன்ஸ்டாகிராமில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்திருந்தார்.
Ethirneechal: மீண்டும் நீலாம்பரியாக வந்திறங்கிய அறிவுக்கரசி... வெறித்தனமான செயலால் ஆடிப்போன குடும்பம்
இதனை தொடர்ந்து இன்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
பதிவை பார்த்த பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |