தொடர்ச்சியாக 3 வெற்றி... பக்கத்துவீட்டு பையன் தோற்றம்: யார் இந்த பிரதீப் ரங்கநாதன்?
சினிமா வரலாற்றில் சாதாரண ஒரு மனிதனாக இருந்து இன்று மிகப்பெயரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் வாழ்க்கை ஒரு பார்வை.
பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். பொறியியல் படித்து விட்டு, சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இவருடைய சீனியர் தான், இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய 'டிராகன் 'திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் வருவது போல பள்ளியில் படிப்பில் கெட்டிக்காரராக இருந்திருக்கிறார் பிரதீப்.
இவர் 12ம் வகுப்பில் 1200க்கு 1163 மதிப்பெண் பெற்று சென்னையில் உள பிரபல தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார். இந்த நிலையில் இவர் படிக்கும் கல்லுரியில் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்குமாம்.
அதனால் பிரதீப்பிற்கு படிப்பில் இருந்த ஆர்வம் போய் சினிமா மீது ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் கல்லலுரியில் படிக்கும் போதே குறும்படங்கள் எடுத்து வந்தார்.
இதன் பின்னர் தன் குடும்பத்திடம் வேலைக்கு போவதாக பொய் சொல்லி தன் முழு நேரத்தையும் திரைப்படம் இயக்க தான் செலவழித்துள்ளார்.
இதன் பின்னர் இந்த திரைப்படத்தை பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் பிரதீப் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்த பலரும் அதில் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள்.
ஆனால் அப்படத்தை இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்கவில்லை என அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதன் பின்னர் பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹீரோவாக களமிறங்கினார்.
முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க கோமாளி படத்தை இயக்கினார். பின்னர் லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு திரைக்கு வந்த லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டியது.
இதன் பின்னர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் சேர்ந்து நடித்த டிராகன் படம் திரைக்கு வந்தது.
ரிலீஸ் ஆன 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்துள்ளார் பிரதீப் என்றே சொல்ல வேண்டும்.
ஒருவர் ஒரு சினிமாத்துறைக்குள் வருவதற்கு எப்படி எல்லாம் கஷ்டபட்டு வருகின்றனர். ஆனால் பிரதீப் தன் உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் இந்த நிலை அடைந்தது போல வேறு எந்த கதாநாயகர்களும் இல்லை.
அவர் இதுவரை நடித்த 2 படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தன் உழைப்பிற்கு சன்மானமாக தற்போது பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் பிரதீப்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |