உடல் எடையை குறைத்த நடிகர் பிரபு: எடை அதிகரித்த நிலையில் மகன் விக்ரம் பிரபு! அதிருப்தியில் ரசிகர்கள்
சமீப நாட்களாக சினிமா பிரபலங்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த வாரம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் குடும்பம் சென்ற நிலையில், நேற்றைய தினத்தில் லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலர் விக்கியுடன் கோவிலுக்குச் சென்ற காட்சி வைரலாகியது.
இந்நிலையில் தற்போது இவர்களைத் தொடர்ந்து நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்று மக்களின் நலனுக்காக வேண்டி கொண்டுள்ளார்.
தன்னுடைய மனைவி, மகன், மருமகள் என ஒட்டுமொத்த குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் பிரபு, பின்னர் வெளியே வந்த போது, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, 'கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும் என்பதற்க திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
எப்போது திருப்பதிக்கு வந்தாலும் நல்ல தரிசனம் கிடைக்கும் அதே போல் இம்முறையும் நல்ல தரிசனம் கிடைத்தாதாகவும் தெரிவித்தார். தனக்கென்று எதுவும் வேண்டி கொள்ளாமல் மக்களுக்காக இவர் வேண்டி கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் தந்தை பிரபு ஒருபுறம் உடல்எடை குறைத்துள்ள நிலையில், விக்ரம் பிரபுவோ உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார்.
