எனக்கு விஷம் கொடுத்தார் என் அண்ணன்! பிரபல நடிகரின் வாக்கு மூலத்தில் வெளிவந்த உண்மை
சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கபட்டு சிகிச்சையில் இருக்கும் நடிகர் பொன்னம்பலத்தின் இந்த நிலைமைக்கு அவரின் அண்ணன் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் யார் மூலம் நடிக்க வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் பிரபல்யமடைந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம்.
இவர் சரத்குமார், ரஜினிகாந்த், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் வில்லத்தனத்திற்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்படியான ஒரு நிலையில் தற்போது சினிமா பக்கம் தற்போது வரும் படங்களில் வருவது குறைவாக இருக்கிறது.
எனக்கு சூனியம் வைத்தார்கள்
இந்த நிலையில் இவர் அண்மையில் உடல்நிலைக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
அப்போது இவரின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் பல நடிகர்கள் பணம் கொடுத்து உதவியுள்ளார்கள் என தகவல்கள் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பான சிகிச்சையில் இவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பொன்னம்பலத்திடம் கேட்ட போது, என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அண்ணன் ஸ்லோ பாய்ஷன் கொடுத்தார். பின்பு ஒரு நாள் இரவில் விட்டிற்கு பக்கத்தில் குழி தோண்டி கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஏன் என்று தெரியவில்லை.
இதனை தொடர்ந்து நான் சென்று பார்த்த போதும் அதில் என்னுடைய பொருட்கள் தான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், சூனியம் செய்து தான் இப்படியான ஒரு நிலைக்கு உங்களை கொண்டு வந்தார்களா? என கமண்ட் செய்து வருகிறார்கள்.